குமாரபாளையத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 395 வழக்குகளுக்கு தீர்வு

குமாரபாளையம் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மன்றம் நடத்தப்பட்டது.

Update: 2022-06-26 11:00 GMT

குமாரபாளையம் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மன்றம் நடத்தப்பட்டது.

குமாரபாளையம் நீதிமன்றத்தில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதி மன்றம் நடத்தப்பட்டது. குற்றவியல் நீதித்துறை நடுவர் மாலதி தலைமை வகித்தார். குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 395 குற்ற வழக்குகள் வகைக்காக 5 லட்சத்து 33 ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வழக்குகள் முடிக்கப்பட்டது. மேலும் காசோலை வழக்குகளில் ஒரு கோடியே 27 லட்சத்து 54 ஆயிரத்து 043 ரூபாய் மதிப்புள்ள வழக்குகளில் சமரச தீர்வு கண்டு வழக்குகள் முடிக்கப்பட்டது.


இதனையொட்டி நீதிமன்ற வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடும் பணியை குற்றவியல் நீதித்துறை நடுவர் மாலதி துவக்கி வைத்தார். இதில் வழக்கறிஞர் சங்க தலைவர் சரவணராஜன், செயலர் நடராஜன், பொருளாளர் நாகப்பன், வழக்கறிஞர்கள் தீனதயாளன், சரவணன், ரமேஸ்,ராஜா, பாலகிருஷ்ணன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற எழுத்தர், மற்றும் ஊழியர்கள் பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News