டீச்சர்ஸ் காலனியில் சர்வீஸ் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

குமாரபாளையம் டீச்சர்ஸ் காலனியில் சர்வீஸ் சாலை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2021-12-24 05:15 GMT

குமாரபாளையம்,  சேலம் கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு டீச்சர்ஸ் காலனி அருகில் சர்வீஸ் ரோடு சிறிது தூரம் மிகவும் சேதமாகி போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லாத வகையில் உள்ளது.

குமாரபாளையம்,  சேலம் - கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு டீச்சர்ஸ் காலனி அருகில்,  சர்வீஸ் ரோடு சிறிது தூரம் மிகவும் சேதமாகி போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. இந்த இடத்தில் செல்லும் வாகனங்கள்,  நிலை தடுமாறி கீழே விழுந்து பலரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இரவில் இந்த சாலை பழுதாகி இருப்பது  தெரியாததால்,  விபத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் படுகாயமடையும் நிலைக்கு ஆளாகிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு,  இந்த பழுதடைந்த சாலையை  சீரமைக்க  வேண்டும் என,  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News