போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை -டி.எஸ்.பி. உறுதி
குமாரபாளையம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுப்பேன் -என டி.எஸ்.பி. உறுதி கூறினார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. யாக மகாலட்சுமி சமீபத்தில் பொறுப்பேற்றார். இவர் நேற்று குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் குமாரபாளையம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனையை முழுவதுமாக தடுக்க நடவடிக்கை எடுப்பேன். விசைத்தறி, கைத்தறி கூலி தொழிலாளர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன். அரசியல்வாதிகளின் பிரச்சினைகளை தாமதமின்றி செயல்பட்டு சமரசம் செய்து வைத்து இனி பிரச்சினை எழாதவாறு நடவடிக்கை மேற்கொள்வேன். பொதுமக்கள் உங்கள் பிரச்சினைகளை, சமூக விரோத செயல்கள் குறித்த தகவல்களை என்னிடம் தெரிவிக்கலாம். எனது மொபைல் எண்: 9498270135என்றார்.