குமாரபாளையம் பகுதியில் செப். 2ல் விநாயகர் சிலைகள் கரைப்பு: கலெக்டர் தகவல்
செப். 2ல் விநாயகர் சிலைகள் கரைக்க மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.;
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வழிகாட்டுதல் கூட்டம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியதம்பி தலைமையில் நடைபெற்றது.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வழிகாட்டுதல் கூட்டம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியதம்பி தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்து எஸ்.ஐ. மலர்விழி கூறுகையில், குமாரபாளையம் பகுதியில் விநாயகர் சிலைகள் வைக்க இதுவரை 21 நபர்கள் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். வைக்கப்படும் சிலைகள் அரசு விதிமுறைக்கு உட்பட்டு உள்ளதா? இரவு பகலாக பாதுகாப்பு வழங்க போலீசார் மற்றும் விழாக்குழுவினர் நியமனம், திருச்செங்கோடு உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்படும் சிலைகள் செப்டம்பர் ௨ம் தேதி காவிரி ஆற்றில் கரைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர், நாமக்கல் எஸ்.பி. அலுவலக கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட விபரங்கள், உள்ளிட்ட பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் எஸ்.எஸ்.ஐ.க்கள், ஏட்டுகள், போலீசார் பலரும் பங்கேற்றனர்.