குமாரபாளையத்தில் செப். 27 பாரத் பந்த் விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்

குமாரபாளையத்தில் செப். 27 பாரத் பந்த் குறித்து ஏ.ஐ.டி.யூ,சி. சார்பில் விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-24 15:00 GMT

குமாரபாளையத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் முழுஅடைப்பு போராட்டம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பொது துறைகளை தனியாருக்கு தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும்.

பெகசாஸ் உளவு செயலி பயன்படுத்தப்பட்டது குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். தொழிலாளர் சட்டங்களை நான்காக சுருக்கியத்தை கைவிட வேண்டும். தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் உள்ள முறைகேடுகளை போக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன் வைத்து செப்டம்பர் 27ல் முழு அடைப்பு போராட்டம் நடக்கவுள்ளது.

இதனை பொதுமக்களிடையே தெரியப்படுத்தும் வகையில் குமாரபாளையம் நகரின் பல இடங்களில் ஏ.ஐ.டி.யூ,சி. சார்பில் மாவட்ட செயலர் பாலசுப்ரமணி தலைமையில் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் ஐ.என்.டி.யூ.சி. ஜானகிராமன், ஏ.ஐ.டி.யூ.சி. நஞ்சப்பன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. சுப்பிரமணி, சி.ஐ.டி.யூ. சண்முகம், எச்.எம்.எஸ். செல்வராஜ், எல்.டி.யூ.சி. சரவணன், எல்.பி.எப். அருள் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News