சி.பி.ஐ. நூற்றாண்டு விழா, மூத்த தலைவர் நல்லகண்ணு 100வது பிறந்த நாள் விழா!

குமாரபாளையம் சி.பி.ஐ. கட்சியின் சார்பில் சி.பி.ஐ. நூற்றாண்டு விழா, மூத்த தலைவர் நல்லகண்ணு 100வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-12-26 14:00 GMT

 குமாரபாளையம் சி.பி.ஐ. கட்சியின் சார்பில் சி.பி.ஐ. நூற்றாண்டு விழா, மூத்த தலைவர் நல்லகண்ணு 100வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் சி.பி.ஐ. கட்சியின் சார்பில் சி.பி.ஐ. நூற்றாண்டு விழா, தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான நல்லகண்ணுவின் 100வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். நகரின் அனைத்து வார்டுகளில் மாநில கட்டுபாட்டுக்குழு தலைவர் மணிவேல் பங்கேற்று கட்சிக்கொடியேற்றி வைத்து வாழ்த்தி பேசினார். தொண்டர்கள் சி.பி.ஐ. கட்சி வாழ்க, நல்லகண்ணு வாழ்க என கோஷமிட்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் துணை செயலர் அசோகன், வடக்கு ஒன்றிய செயலர் அர்த்தனாரி, மாவட்ட நிர்வாகக்குழு வழக்கறிஞர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலர் கிருஷ்ணசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News