அனுமதியின்றி மண் லோடு ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்: ஓட்டுநர்கள் கைது

குமாரபாளையத்தில் அனுமதியின்றி மண் லோடு ஏற்றி வந்த இரு ஓட்டுநர்களை கைது செய்து 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-01-13 10:45 GMT
குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே அனுமதி இல்லாமல் மண் அள்ளுவதாக தாசில்தார் தமிழரசிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 02:00 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலை நேரு நகர், டேன் இந்தியா சிமெண்ட் ஆலை அருகே தாசில்தார் தமிழரசி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. முருகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது லாரிகள் மண் லோடுடன் ஒன்றும், லோடு இறக்கிய நிலையில் ஒன்றும் வந்து கொண்டிருந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட வருவாய்த்துறையினர் லாரிகளை மடக்கி பிடித்தனர். லாரி ஓட்டுநர்கள் இருவர் மற்றும் இரு லாரிகளை குமாரபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்து, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரினர்.

போலீசாரின் விசாரணையில் லாரிகள் இரண்டும் குமாரபாளையம் மேற்கு காலனி, லோகநாதன் என்பவருக்கு சொந்தமானது என்பதும், இதன் ஓட்டுநர்கள் குமாரபாளையத்தை சேர்ந்த ராஜா, 38, குமார், 41, என்பதும் தெரியவந்தது. அனுமதி இல்லாமல் மண் அள்ளிய குற்றத்திற்காக வி.ஏ.ஒ. முருகன் கொடுத்த புகாரின் படி, லாரி ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன், லாரிகள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News