காவிரியில் அலசிய 10 டன் துணிகள் பறிமுதல்: வருவாய்த்துறையினர் அதிரடி

பள்ளிபாளையம் பகுதி காவிரி ஆற்றில் அலசிய 10 டன் துணிகள் பறிமுதல் செய்து வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2022-04-03 02:22 GMT

பள்ளிபாளையம் பகுதியில் காவிரியில் அலசிய 10 டன் துணிகள் பறிமுதல் செய்து வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் சாயமிடும் தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளன. காளிங்கராயன் வாய்க்கால், காவிரி நீர் மாசு படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் கெடுபிடியால், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஈரோடு சாய ஆலை உரிமையாளர்கள், சாயம் போடபட்ட துணிகளை அவத்திபாளையம், சமயாங்கிலி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் அலசிவதை வாடிக்கையாக கொண்டனர்.

இது பற்றி தகவலறிந்த குமாரபாளையம் தாலுக்கா வருவாய்த்துறையினர், தாசில்தார் தமிழரசி தலைமையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் காவிரி கரையோரம் பல இடங்களில் சாயம் போடப்பட்ட துணிகள் அலசியது தெரியவந்தது. இந்த துணிகள் 10 டன் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தண்ணீருக்குள் மூழ்க வைத்து அலசும் நுட்பமான முறையை கையாண்டுள்ளனர். அதிகாரிகள் வருவதை கண்ட பணியாளர்கள் தங்கள் உடைமைகளை போட்டுவிட்டு தப்பி சென்றனர். இதில் லுங்கி, பாலியஸ்டர், காட்டன் சேலைகள், சர்ட் பிட்டுகள் ஆகியன இருந்தன. இந்த துணிகள், டெம்போ ஒன்று ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் கிருஷ்ணன், உதவி தாசில்தார் ரவி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.க்கள் தியாகராஜன், முருகன், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News