குட்டையில் மீன் வளர்க்க ரகசிய ஏலம்: குமாரபாளையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் அருகே குட்டையில் மீன் வளர்க்க நடந்த ரகசிய ஏலத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சியில் உள்ள நல்லாம்பாளையம் கழிவுநீர் குட்டையில் மீன் வளர்க்க யாருக்கும் தெரிவிக்காமல் ரகசிய ஏலம் விட்டதைக் கண்டித்தும், குட்டை நீர் விவசாய நிலங்களுக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தியதை எதிர்த்தும் சி.பி.எம்., சி.பி.ஐ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கல்லங்காட்டுவலசு பஸ் நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம். ஒன்றிய செயலர் முருகேசன் தலைமை வகித்தார். ஊராட்சி நிர்வாகத்தின் அத்துமீறலைக் கண்டித்துக் கண்டன கோஷங்கள் போடப்பட்டது. ஊராட்சியின் செயலை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
சி.பி.எம். மாவட்ட செயலர் கந்தசாமி, சி.பி.ஐ. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேஷ்குமார் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்தனர். நிர்வாகிகள் கேசவன், ரங்கசாமி, பெருமாள், தனபால், மனோகரன் உள்படப் பலர் பங்கேற்றனர்.