எலந்தகுட்டையில் நாளை இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்
எலந்தகுட்டை அரசு மருத்துவமனையில், நாளை முதல், இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழக அரசு சார்பாக, நாமக்கல் மாவட்டத்தில் நாளை திங்கட்கிழமை (31.05.2021) அன்று 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 84 நாட்களுக்கு முன், முதல் தவணை கோவிட்ஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு, மீண்டும் தடுப்பூசி போடப்படுகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எலந்தகுட்டை அரசு மருத்துவமனையில், 100 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதுபற்றிய விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமாக, இதில் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று, இந்த பட்டியல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.