தேடப்பட்டு வரும் 3 குற்றவாளிகள் நீதிமன்றம் உத்திரவு
குமாரபாளையம் குற்ற வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என நீதிமன்றத்தால் உத்திரவிடப்பட்டுள்ளது.;
தேடப்பட்டு வரும் 3 குற்றவாளிகள்
நீதிமன்றம் உத்திரவு
குமாரபாளையம் குற்ற வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என நீதிமன்றத்தால் உத்திரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது,
திருட்டு வழக்கில் நீதிமன்றம் ஆஜராகாமல் குமராபாளையம் காவல் நிலைய குற்ற எண் 440/2010 வழக்கின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுக்கா, நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எதிரி 1. குண்டன் (எ) ராமகிருஷ்ணன், 25, 2. ஊத்தங்கரை நாய்க்கன்புதூர் வெங்கடேசன், 27, 3. ஊத்தங்கரை நாய்க்கன் புதூர் மாயன்(எ)மாரியப்பன், 23, ஆகிய மூன்று எதிரிகளையும் நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், திருச்செங்கோடு, தேடப்பட்டு வரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு மூன்று பேரும் நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் திருச்செங்கோட்டில் 2025, ஜூன், 23, தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.