குமாரபாளையத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்: அதிகாரிகள் எச்சரிக்கை
குமாரபாளையத்தில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகள் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் கடையினரிடம் நேரில் அறிவுறுத்தினர்.;
குமாரபாளையத்தில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகள் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் கடையினரிடம் நேரில் அறிவுறுத்தினர்.
இது பற்றி நகராட்சி கமிஷனர் சசிகலா கூறியதாவது:- குமாரபாளையம் பாலக்கரை, சின்னப்பநாயக்கன்பாளையம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் பலர் பல தொழில்கள் செய்து வருகின்றனர். இவர்களில் பலர் 10, 8 என பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ளனர்.
இதனை தீவிரப்படுத்த நகராட்சி கடைகளுக்கு நகராட்சி மேலாளர் சண்முகம், ஆர்.ஐ. கோபால் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று மார்ச் 22க்குள் வாடகை நிலுவை தொகை முழுதும் செலுத்தப்பட வேண்டும், இல்லையேல் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளனர். மேற்படி தேதிக்குள் வாடகை செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.