குமாரபாளையத்தில் வாடகை தராத கடைக்கு சீல்: புதிய நகராட்சி கமிஷனர் அதிரடி

குமாரபாளையத்தில் வாடகை தராத கடைக்கு புதிய நகராட்சி கமிஷனர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2021-11-26 12:15 GMT

குமாரபாளையத்தில் பழைய காவேரி பாலம் அருகே நகராட்சி கடைக்கு வாடகை தராததால் நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

குமாரபாளையத்தில் வாடகை தராததால் நகராட்சியினர் சீல் வைத்தனர்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சசிகலா கூறுகையில்,  குமாரபாளையம் நகராட்சி சார்பில் பழைய காவேரி பாலம் அருகே நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இதில் 2 ரேசன் கடைகள் மற்றும் இதர கடைகளில் தனியார் பல தொழில்கள் செய்து வருகின்றனர். இதில் இரண்டு கடையினர் பல லட்சம் மதிப்பில் வாடகை நிலுவை வைத்துள்ளனர்.

தமிழக நகராட்சி இயக்குனர் பொன்னையா உத்திரவின்படியும், சேலம் மண்டல நகராட்சி இயக்குனர் சுல்தானா அறிவுறுத்தல்படியும், நேற்று மணி, என்பவரின் பழைய பேப்பர் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இவரது நிலுவைத்தொகை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 887 ரூபாய்.

மற்றொருவரான செந்தில்குமாரின் நிலுவை தொகை இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய். இவர் அவகாசம் கோரியுள்ளதால் குறிப்பிட்ட நாட்கள் விட்டு வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னும் தொகை செலுத்தாவிட்டால் இந்தக் கடைக்கும் சீல் வைக்கப்படும். 

இதேபோல் நகராட்சிக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்ட் மற்றும் வாரச்சந்தை வளாகம் உள்ளிட்ட கடைகளில் தொழில் நடத்தி வருபவர்கள் வாடகை பாக்கி வைத்திருந்தால் உடனடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதில் நகராட்சி மேலாளர் சண்முகம், ஆர்.ஐ. கோபால், அலுவலர்கள் பாஸ்கர், அய்யனார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News