எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.;
எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியில்
அறிவியல் கண்காட்சி
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வக இரண்டாம் ஆண்டு துவக்க விழா, மற்றும் அறிவியல் கண்காட்சி தாளாளர் ரவீந்திரன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் சித்தார்த் மற்றும் ஜெயகாந்தன் பங்கேற்று கண்காட்சியை துவக்கி வைத்தனர். இதில் மாணவ, மாணவியர் 27 படைப்புக்களை பார்வைக்கு வைத்திருந்தனர். விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் ரோபோட் வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது அனைவரையும் ரசிக்க வைத்தது. சிறப்பு அழைப்பாளர் ஜெயகாந்தன் பேசியதாவது:
மாணவ, மாணவியர்கள் பெறும் கல்வி வெறும் ஏட்டுக்கல்வியாக இல்லாது, ஆக்கபூர்வமாக தனக்கும், தன்னை சார்ந்தோர்களுக்கும் மட்டுமில்லாமல், சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் அறிவை பெருக்கி கொண்டு, சிந்தித்து செயல்பட வேண்டும். சமூக சேவைகளில் ஈடுபடவேண்டும். பெற்றோர்களை காலமெல்லாம் காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முதல்வர் தணிகாசலம், துணை முதல்வர் பார்த்திபன் உள்பட பலர் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.