பள்ளி மாணவன் தற்கொலை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-03-26 16:15 GMT

வெப்படையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையம் அருகே தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. கட்டுமான தொழிலாளியான இவரது மகன் ரிதுன். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சக மாணவியுடன் பேசியதற்காக பள்ளி ஆசிரியை ஒருவர் திட்டியதுடன், பள்ளிக்கு வெளியே நிற்க வைத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவன் பள்ளிக்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவரின் உடல் பெருந்துறை ஜி.ஹெச்.ல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சம்பவத்திற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, மாணவனின் உறவினர்கள் உடலை வாங்க தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் மாணவன் சாவுக்கு ஆசிரியை, தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு ஒன்றிய துணை செயலர் சூர்யபிரகாஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் பெருமாள், ஒன்றிய தலைவர் வக்கீல், நிர்வாகிகள் கோபி, கண்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மாணவனின் பெற்றோருக்கு நஷ்ட ஈடாக அவனது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதே அமைப்பின் சார்பில், இதே கோரிக்கையை வலியுறுத்தி பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்டிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News