குமாரபாளையம்; பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம்
குமாரபாளையம் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது.
பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம்
குமாரபாளையம் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் தலைமை ஆசிரியை காந்தரூபி தலைமை வகித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதுடன், அனைவரும் பொறுப்பேற்றுக்கொண்டு, தங்கள் கடமையை சரியாக செய்வோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
துணை தலைமை ஆசிரியை சாரதா, பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகளை பற்றி விளக்கி கூறினார். கவுன்சிலர்கள் கனகலட்சுமி, ஜேம்ஸ், சமூக ஆர்வலர் பன்னீர்செல்வம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வேமன் காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார்.
பள்ளிபாளையம் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் மேற்பார்வையிட்டு சான்றிதழ்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் 14 பெற்றோர் உறுப்பினர் 3 முன்னாள் மாணவ உறுப்பினர் , ஒரு சுய உதவி குழு உறுப்பினர் , ஒரு முன்னாள் மாணவர், இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் இருவர் ஆசிரியர் பிரதிநிதிகள் இருவர் என மொத்தம் 24 உறுப்பினர்கள் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் திரளாக கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் குமார், அருள், மாதேசு ஆகியோர் பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகளை விளக்கி கூறினர். புத்தர் தெரு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் மோகன் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் வள்ளியம்மாள், பாண்டிசெல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குள்ளநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ராஜா தலைமை வகித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பி.டி.ஏ.தலைவர் சக்திவேல், பொருளர் வாசுதேவன் உள்பட பலர் பங்கேற்றனர்.