அமமுக சார்பில் சசிகலா பிறந்த நாள் விழா
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சசிகலாவின் பிறந்தநாள் விழா குமாரபாளையத்தில் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சசிகலாவின் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. சின்னப்பநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோவிலில் நகர செயலர் அங்கப்பன் தலைமையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு இனிப்புகள், முக கவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் வழங்கப்பட்டன. குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் உள் நோயாளிகளுக்கு பால், பழங்கள், வழங்கப்பட்டன. காவேரி நகர், பெராந்தர்காடு பகுதியில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. நிர்வாகிகள் சீனிவாசன், ரமேஷ், வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.