குமாரபாளையத்தில் சரோஜினி நாயுடு பிறந்த நாள்: வியல் ஆரம்பத்தினர் மலர் தூவி மரியாதை

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் சரோஜினி நாயுடு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2022-02-14 13:15 GMT

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் இந்தியாவின் முதல் ஆளுநரும், சுதந்திர போராட்ட வீராங்கனையுமான சரோஜினி நாயுடு பிறந்த நாள் விழா தலைவர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் இந்தியாவின் முதல் ஆளுநரும், சுதந்திர போராட்ட வீராங்கனையுமான சரோஜினி நாயுடு பிறந்த நாள் விழா தலைவர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கபட்டு, மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் பேசிய பிரகாஷ், ஜனவரி 26, 1930 இல் தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் கோரியது. மே 5ல் மோகன்தாஸ் காந்தி கைது செய்யப்பட்டார். சில நாட்களிலேயே நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியுடன் ஜனவரி 31, 1931 ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார்.

1947, ஆக.15ம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பின் உத்தரப்பிரதேச ஆளுனராக பதவியேற்றார். இதனால் இந்தியாவின் முதல் பெண் ஆளுனரானார் என அவர் பேசினார்.

இதில் நிர்வாகிகள் ஜெகதீஸ், மணிகிருஷ்ணா, நலவாரியம் செல்வராஜ், தீனா, சண்முகசுந்தரம், பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News