குமாரபாளையம் நகராட்சி குடிநீர் பணி மேற்பார்வையாளராக சரவணன் நியமனம்
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் பணி மேற்பார்வையாளராக சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.;
சரவணன், நகராட்சி குடிநீர் பணி மேற்பார்வையாளர், குமாரபாளையம்.
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் பணி மேற்பார்வையாளராக சந்தோஷ் பணியாற்றி வந்தார். இவர் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யபட்டார். இவருக்கு பதிலாக பள்ளிபாளையம் நகராட்சியில் இதே பணியில் இருந்த சரவணன் குமாரபாளையம் நகராட்சிக்கு குடிநீர் பணி மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டார்.
பொறுப்பேற்றுக்கொண்ட சரவணனுக்கு, நகராட்சி கமிஷனர் சசிகலா, பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி மேலாளர் சண்முகம், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.