குமாரபாளையத்தில் சந்து பொங்கல் விழா கோலாகலம்: பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

குமாரபாளையத்தில் நடைபெற்ற சந்து பொங்கல் விழாவில் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

Update: 2021-12-29 07:17 GMT

குமாரபாளையம் நகரில் சந்து பொங்கல் விழா தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. 

குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மார்கழி மாதத்தில், ஒவ்வொரு வீதியினரும் தங்கள் பகுதி பொதுமக்கள் நலமுடன் வாழவும், வியாபாரம் செழிக்கவும், பிள்ளைகளின் கல்வி முன்னேறவும், திருமணங்கள் கை கூடவும், தீராத நோய்கள் குனமாகிடவும் வேண்டி சந்து பொங்கல் எனும் பெயரில் பொங்கல் விழா நடத்துவது வழக்கம்.

தற்போது மார்கழி மாதம் பிறந்ததால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், நிறைய இடங்களில் சந்து பொங்கல் விழா உற்சாகமாக பொதுமக்கள் கொண்டாடினர்.

காவேரி ஆற்றுக்கு சென்று மேள தாளங்களுடன் தீர்த்த குடங்கள் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News