குமாரபாளையத்தில் திருநங்கைகளின் சந்தோஷி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
குமாரபாளையத்தில் திருநங்கைகளின் சந்தோஷி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
குமாரபாளையத்தில் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி அருகே திருநங்கைகளால் உருவாக்கப்பட்ட சந்தோஷி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காவேரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை பவானி சங்கமேஸ்வர ஆலய சிவாச்சாரியார்கள் மணிகண்டன், யோகேஷ் குழுவினர் நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு ஊர்களிலிருந்து திருநங்கைகள் பெருமளவில் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற நகராட்சி சேர்மன் விஜய்கண்ணனுக்கு சிறப்பு மரியாதை கோவில் நிர்வாகத்தினர் சார்பில் வழங்கப்பட்டது.