விடியல் ஆரம்பம் சார்பில் சங்கமம் கண்காட்சி

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் சங்கமம் கண்காட்சி நடைபெற்றது

Update: 2022-08-04 13:45 GMT

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் நடைபெற்ற சங்கமம் கண்காட்சியில் முதல் விற்பனையை இன்ஸ்பெக்டர் ரவி தொடங்கி வைத்தார்.

அரசு பள்ளியில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி மாணாக்கர்களுக்கு உதவி வரும் குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் சங்கமம் கண்காட்சி நடைபெற்றது.

குறைந்த லாபத்தில் உள்ளூரில் தயாரிக்கப்படும் கலப்படம் இல்லாத இயற்கை உணவு பொருட்கள் வழங்கும் நோக்கத்தில் இந்த சங்கமம் கண்காட்சி நடைபெற்றது. இதில் தொழிலதிபர் ராஜாராம் கண்காட்சியை துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் ரவி, முன்னாள் கவுன்சிலர் ராமசாமி  ஆகியோர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். உடலுக்கு நன்மையை தரும் மசாலா பொடிகள், பச்சிலை சாறு, இயற்கை சோப்பு, நவதானிய சூப் உள்ளிட்ட பல பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை விடியல் பிரகாஷ், பிசினஸ் மீட் சோமசுந்தரம் செய்திருந்தனர்.



Tags:    

Similar News