பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை படுஜோர்

பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டதால் குமாரபாளையம் பகுதியில் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை படு ஜோராக நடைபெற்றது.

Update: 2021-09-01 16:45 GMT
குமாரபாளையம் பகுதியில் உள்ள ஸ்டேஷனரி கடையில் பொருட்களை வாங்கும் கல்லூரி மாணவர்கள்.

இதுகுறித்து குமாரபாளையம் வாசவி ஸ்டோர் உரிமையாளர் முரளி கூறியதாவது:

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பின் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி நாங்களும் கடைகளின் முன் கிருமிநாசினி மருந்து வைத்துள்ளோம். முககவசம் நாங்கள் அணிவது மட்டுமில்லாமல், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களையும் கட்டாயம் முககவசம் அணிய வைக்கிறோம். சமூக இடைவெளியுடன் நிற்க சொல்லி வியாபாரம் செய்து வருகிறோம். பள்ளிகள் திறந்ததால் மாணவ, மாணவியர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்கள், நோட்ஸ், நோட் புக்ஸ், பேப்பர், பேனா, பென்சில், உள்ளிட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான ஸ்டேஷனரி பொருட்களை அதிக நபர்கள் வாங்கி சென்றனர். மாணவர்களிடமும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாததால் மிகவும் தொய்வு பெற்ற எங்கள் வியாபாரம் இனி ஏற்றம் பெறும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News