குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-09-26 03:48 GMT

குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை எதிர்மேடு பாலு பெட்டிகடையில் புகையிலை பொருட்கள் விதி மீறி விற்கப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் ஆய்வு செய்த போது, பாலசுப்ரமணி (வயது56,) என்பவர் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இவர்மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News