குமாரபாளையம் அருகே பறக்கும் படையினரால் ரூ. 3 லட்சம் பறிமுதல்
குமாரபாளையம் அருகே பறக்கும் படையினரால் 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.;
குமாரபாளையம் அருகே பறக்கும் படையினரால் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. பறக்கும் படையினர் ஆவணங்கள் இல்லாமல் யாராவது பணம் கொண்டு செல்கிறார்களா? என்பது குறித்து இரவு பகலாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
பள்ளிபாளையம், குமாரபாளையம் வழியில் கைத்தறி ஆய்வாளர் ராஜேஷ்குமார் தியானேஸ்வரன் தலைமையிலான பறக்கும் படையினர் இரவு 07:40 மணியளவில் அவ்வழியே வந்த வோல்ஸ்வேகன் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த தியானேஸ்வரன், பழனிச்சாமியிடம் விசாரிக்க ஆவணங்கள் இல்லாமல் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல் விதிமுறைப்படி திருச்செங்கோடு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டரிடம் உரிய ஆவணங்கள் காண்பித்து இந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.