குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்: குமாரபாளையம் நகராட்சி அதிரடி
குப்பை கொட்டினால் 5 ஆயிரம் அபராதம் என குமாரபாளையம் நகராட்சி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற, சேர்மன் விஜய்கண்ணன், கமிஷனர் விஜயகுமார் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோம்பு பள்ளம் பகுதியில் உள்ள குடியிருப்பு, ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட வணிக நிறுவனத்தார் குப்பைகளை கோம்பு பள்ளத்தில் கொட்டி வருவதால் அடிக்கடி கழிவுநீர் செல்ல தடை ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி பொக்லின் மூலம் அகற்றப்படும் நிலை ஏற்படுகிறது.
இதனால் கோம்பு பள்ளம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் இங்கு குப்பை கொட்டுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.