குமாரபாளையத்தில் ரோட்டரி சங்க பட்டாசுக் கடை திறப்பு விழா

குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் தீபாவளி விற்பனைக்காக பட்டாசுக் கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது.;

Update: 2021-10-25 14:15 GMT

குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற பட்டாசு கடை திறப்பு விழாவில் முதல் விற்பனையை துணை ஆளுநர் அர்த்தநாரீஸ்வரன், முன்னாள் ஆளுநர் நடேசன், மாவட்ட தலைவர் சிவசுந்தரம் துவக்கி வைத்தனர்.

சேவை திட்டப் பணிகள் செய்திட ஆண்டுதோறும் குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் பட்டாசு கடை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று பட்டாசுக் கடை திறப்பு விழா சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆளுநர் சரவணன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முதல் விற்பனையைத் துணை ஆளுநர் அர்த்தநாரீஸ்வரன், முன்னாள் ஆளுநர் நடேசன், மாவட்ட தலைவர் சிவசுந்தரம், நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு, இன்ஸ்பெக்டர் ரவி துவக்கி வைத்தனர்.

இதுகுறித்து சங்கத் தலைவர் செந்தில்குமார் கூறுகையில், ரோட்டரி சங்கம் சார்பில் பல்வேறு சேவைப்பணிகள் செய்து வருகிறோம். இந்த சேவைப் பணிகள் தொடர்ந்து செய்திட இந்த பட்டாசுக் கடை வருமானம் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் முழுதும் முழுக்க முழுக்க சேவைத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தவிருப்பதால் பொதுமக்கள் தாங்களும் சேவைப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள எங்களது ரோட்டரி சங்க பட்டாசுக் கடையில் பட்டாசு வாங்கி உதவ வேண்டுகிறோம். இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

நிர்வாகிகள் செயலாளர் தரணிதரன், பொருளாளர் சண்முகம் உள்படப் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News