குமாரபாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமாரபாளையம் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
குமாரபாளையத்தில் நடந்த சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
குமாரபாளையம் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நல பணி திட்டம், தமிழ்நாடு கிளைம் இன்வெஸ்டிகேட்டேர்ஸ் அசோசியேசன் மற்றும் குமாரபாளையம் சாலை போக்குவரத்து துறை இணைந்து சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நல பணி திட்டம், தமிழ்நாடு கிளைம் இன்வெஸ்டிகேட்டேர்ஸ் அசோசியேசன் மற்றும் குமாரபாளையம் சாலை போக்குவரத்துத் துறை இணைந்து சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமையில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளர்களாக குமாரபாளையம் சாலை போக்குவரத்து துறை அதிகாரி பூங்குழலி, மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1 சிவகுமார் தமிழ்நாடு கிளைம் இன்வெஸ்டிகேட்டேர்ஸ் அசோசியேசன் மாநில நிர்வாக அலுவலர் பிரதாப்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் வட்டார போக்குவரத்து அலுவலலர் பூங்குழலி பேசியதாவது:-
மாணவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் கட்டாயம் ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும். இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது கட்டாயம் தலை கவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். மாணவர்கள் ஓடும் பஸ்ஸில் ஏறி இறங்க கூடாது. சாலை வளைவுகளில் வாகனங்களில்முந்தி செல்ல கூடாது. வாகனங்களில் அதி வேகமாக செல்ல கூடாது. சாலையை கடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட வர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற் படுத்தினால் அதற்கு அவர்கள் பெற்றோர் தான் முழு பொறுப்பு. ,அனைத்து சாலை விதி முறைகளையும். அவசர உதவிக்கு 108 அழைக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கல்லூரி நிர்வாகிகள் புருஷோத்தமன், ஈஸ்வர், போக்குவரத்து ஆய்வாளர் ஷாஜகான், எஸ்.ஐ, தங்கவடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.