அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-02-13 16:45 GMT

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து விதி விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்தது.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து விதி விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்தது.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை போக்குவரத்து விதிகளை மதிப்போம் என்பதை வலியுறுத்தி பொம்மலாட்டம் நிகழ்ச்சி குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக நடந்தது.

பள்ளியின் தலைமையாசிரியர் . ஆடலரசு தலைமை வகித்தார். சிறப்பு விருந்திர்களாக வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் பங்கேற்றனர்.


பொம்மலாட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சீனிவாசன், செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு பொம்மலாட்ட கதைகள் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரம் எடுத்துக் கூறினர். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பாவனை நடிப்பு மற்றும் நாடகம் நடத்தப்பட்டது. மாணவர்களிடையே கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், சால்வை அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டனர். மேலும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், ஆசிரியர் பெருமக்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.. இதற்கான ஏற்பாடுகளை என்.சி.சி அலுவலர் அந்தோணிசாமி, கவிராஜ் செய்தனர்.

குமாரபாளையத்தில் ஹெல்மெட் விழிப்புர்ணவு பேரணி நடந்தது.

தமிழக அரசு போக்குவரத்து துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, ஹெல்மெட் விழிப்புர்ணவு பேரணி ராஜம் தியேட்டர் முன்பிருந்து துவங்கி, சேலம் சாலை, ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை வழியாக சென்று பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நிறைவு பெற்றது.

நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆர்.டி.ஓ.க்கள் முருகேசன், சரவணன், பூங்குழலி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், சரவணன், உமாமகேஸ்வரி, நித்யா, சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வாகன முகவர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் பிடித்தவாறு பேரணியில் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் டெம்போ, டூரிஸ்ட், ஆட்டோ இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பினை பின்பற்றி வாகனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன. 

Tags:    

Similar News