குமாரபாளையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

குமாரபாளையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-03-26 12:00 GMT

குமாரபாளையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. (இடம்: பஸ் ஸ்டாண்ட்)

தமிழ்நாடு போக்குவரத்து துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் மது விலக்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற நிகழ்சிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். குமாரபாளையம் எஸ்.ஐ. மலர்விழி, வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிகுமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

மாதேஸ்வரன் பேசுகையில், தலைகவசம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது, மது குடித்து விட்டு எந்த வாகனமும் ஓட்டக்கூடாது, மொபைல் பேசிய படி வாகனம் ஓட்டகூடாது, கார்களில் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும், ஓடும் பேருந்தில் ஏறக்கூடாது, சிக்னலில் சிவப்பு விளக்கை மதிக்க வேண்டும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விட வேண்டும், மருத்துவமனை, பள்ளிகள் அருகே ஒலி எழுப்ப கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கரகாட்டம், தப்பாட்டம் ஆடியவாறும், எமன், சித்திரகுப்தன் வேடமணிந்து கலை நிகழ்சிகள் நடத்தப்பட்டன.

Tags:    

Similar News