விபத்து அபாயத்தில் அரசு கல்லூரிகள் சாலை அதிகாரிகள் மெத்தனம்
குமாரபாளையம் அரசி கல்லூரிகளுக்கு செல்லு சாலை குண்டும் குழியுமாக விபத்து அபாயத்தில் இருந்து வருகிறது.;
விபத்து அபாயத்தில் அரசு கல்லூரிகள் சாலை
அதிகாரிகள் மெத்தனம்
குமாரபாளையம் அரசி கல்லூரிகளுக்கு செல்லு சாலை குண்டும் குழியுமாக விபத்து அபாயத்தில் இருந்து வருகிறது.
குமாரபாளையம் ராஜம் தியேட்டர் பின்புறம் ஓலப்பாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதில் ஏராளமான வேகத்தடைகளும் உள்ளன. பல்லாயிரம் மாணவ, மாணவியர் வந்து செல்லும் சாலை. மேலும் பெரியார் நகர், காந்தி நகர், ஓலப்பாளையம், சடையம்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலையும் கூட. இந்த பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்ற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். எண்ணற்ற விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஜவுளிகளை கொண்டு செல்லவும், நூல் பண்டல்களை எடுத்து செல்லவும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. மிக முக்கியமான சாலை பல ஆண்டுகளாக, குண்டும், குழியுமாக உள்ளது. பலரும் இந்த பள்ளங்களில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். உடல்நலமில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலையில் இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது. பல முறை இப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட அதிகாரிகள் வசம் சொல்லியும் பலனில்லை. அதிகாரிகளின் மெத்தனம் அசம்பாவிதம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகும் நிலையில் தான் உள்ளது. இனியும் தாமதம் செய்யாமல் உடனே இந்த சாலையை புதிய தார் சாலையாக மாற்றம் செய்து தர இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனியும் தாமதம் செய்தால், பல அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடவும் தயார் நிலையில் உள்ளனர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் செல்லும் சாலை, குண்டும், குழியுமாக உள்ளது.