ஓடை ஆக்கிரமிப்பு: இரண்டாவது நாளாக அகற்றிய வருவாய்த்துறையினர்
குமாரபாளையம் அருகே ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த காம்பவுண்ட் சுவரை இடிக்கும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர்;
குமாரபாளையம் அருகே சவுதாபுரம் பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர், அங்குள்ள ஓடைப்பகுதியை ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் அமைத்திருந்தனர்.
இது பற்றி பலமுறை தகவல் தெரிவித்தும் மில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காததால், வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேரில் சென்று, பொக்லைன் மூலம் காம்பவுண்ட் சுவற்றை அகற்றும் பணியை இரண்டாவது நாளாக மேற்கொண்டனர். இதில் உதவி வட்டாட்சியர் ரவி, ஆர்.ஐ.விஜய், வி.ஏ.ஒ. முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.