கல்லறை தோட்டம் அமைக்க தீர்மானம் - நகராட்சி தலைவருக்கு கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி!
குமாரபாளையத்தில் கல்லறை தோட்டம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றிய நகராட்சி தலைவருக்கு கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.;
கல்லறை தோட்டம் அமைக்க தீர்மானம் நகராட்சி தலைவருக்கு கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி
குமாரபாளையத்தில் கல்லறை தோட்டம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றிய நகராட்சி தலைவருக்கு கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.
குமாரபாளையம் நகராட்சி பகுதியில் கிறிஸ்துவ சமுதாய மக்களுக்கு கல்லறை தோட்டம் அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. நேற்றுமுன்தினம் நடந்த குமாரபாளையம் நகர் மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணனை, நடராஜா நகர் புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்கு தந்தை பெஞ்சமின், கவுன்சிலர் ஜேம்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து பாராட்டி, நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
குமாரபாளையம் தி.மு.க. நகர செயலராக முன்னாள் கவுன்சிலர் செல்வம் சில ஆண்டுகள் முன்பு தி.மு.க. தலைமை செயலகத்தால் நியமனம் செய்யப்பட்டார். சில மாதங்கள் முன்பு குமாரபாளையம் நகரம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, வடக்கு மற்றும் தெற்கு நகர பொறுப்பாளர்கள் எனும் பெயரில் வடக்கில் செல்வம், தெற்கில் முன்னாள் கவுன்சிலர் ஞானசேகரன் நியமனம் செய்யப்பட்டனர். நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தனக்கு கட்சியில் நகர அமைப்பாளர் பொறுப்பு வேண்டும் என, மூத்த நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டிருந்தார். சில நாட்கள் முன்பு மாற்றுக்கட்சியில் சேரவிருப்பதாகவும், தன்னை சுதந்திரமாக செயல்படவிடாமல், நகர தி.மு.க. அமைப்பாளர் ஒருவர் இடையூறு செய்து வருவதாகவும், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் நகர்மன்ற கூட்டத்தில் பகிரங்கமாக புகார் கூறினார். தி.மு.க. மேலிடம் சற்று பொறுத்திருக்க சொன்னதாக கூறி வந்த நிலையில், நேற்று நகர வடக்கு பொறுப்பாளர்
செல்வம், அவர் வகித்து வந்த நகர வடக்கு பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் அந்த பொறுப்புக்கு தி.மு.க. தலைமை செயலகத்தால் நியமிக்கப்பட்டார். இதையொட்டி விஜய்கண்ணன் தங்கள் ஆதரவாளர்களுடன் டூவீலர்களில் ஊர்வலமாக சென்று, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருச்செங்கோடு சென்று தி.மு.க. மாவட்ட செயலர் மதுரா செந்தில் வசமும் வாழ்த்து பெற்றார். நகரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.