குமாரபாளையத்தில் கட்சி பாரபட்சமின்றி குறைகளுக்கு தீர்வு: நகராட்சி சேர்மன்

குமாரபாளையத்தில் கட்சி பாரபட்சமின்றி குறைகளுக்கு தீர்வு காணப்படும் என நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-21 14:45 GMT

குமாரபாளையம் சேர்மன் விஜய்கண்ணன் 12வது வார்டில் ஆய்வு செய்து கவுன்சிலர் அழகேசனிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகளில் தி.மு.க. 14, அ.தி.மு.க. 10, சுயேட்சை 9 எனும் விதத்தில் வெற்றி பெற்றனர். இதில் சுயேச்சை வேட்பாளர் விஜய்கண்ணன் 18 ஓட்டுக்கள் பெற்று தலைவர் பதவியை பெற்றார். இவருக்கு தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் அதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் 5வது வார்டு கவுன்சிலர் சுமதி தனது வார்டில் சாக்கடை அடைப்பு குறித்தும், 12வது வார்டு கவுன்சிலர் அழகேசன் தனது வார்டில் சாக்கடை அடைப்பு குறித்தும், 18வது வார்டு கவுன்சிலர் கனகலட்சுமி தனது வார்டில் உள்ள குறைகள் குறித்தும் ஆய்வுக்கு வந்த நகராட்சி சேர்மனிடம் கூறினர். நகராட்சி அதிகாரிகளுக்கு உடனே தகவல் கொடுத்து, உடனே அவைகளை சரி செய்திட அறிவுறித்தினார். நகராட்சி சுகாதார பணியாளர்கள் நேரில் வந்து சாக்கடை அடைப்புகளை நீக்கினர்.

சேர்மன் விஜய்கண்ணன் கூறுகையில், குமாரபாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் உள்ள குறைகள், கட்சி பாகுபாடு இல்லாமல், பாரபட்சமின்றி நிவர்த்தி செய்யப்படும். மக்கள் சேவையை மட்டும் மனதில் எண்ணி செயல்படுவேன் எனக் கூறினார்.

துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர் கோவிந்தராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News