திமுகவிற்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம்
குமாரபாளையம் நகரமன்ற தலைவர், துணை தலைவர் தேர்தலில் திமுகவிற்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம்.;
குமாரபாளையம் நகர்மன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குமாரபாளையம் நகரமன்ற தலைவர், துணை தலைவர் தேர்தலில் தி.மு.க.விற்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகளுக்கான நகரமன்ற தேர்தலில் தி.மு.க. 14, அ.தி.மு.க. 10, சுயேச்சை 9 எனும் வகையில் வெற்றி பெற்றனர். குமாரபாளையம் நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று காலை நடைபெற்ற நகர மன்ற தலைவர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் விஜய்கண்ணன் 18 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்தியசீலன் 15 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார்.
இதில் தி.மு.க. முன்னாள் நகர செயலரும், 25வது வார்டு தி.மு.க. உறுப்பினருமான வெங்கடேசன் துணை தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், வெங்கடேசன் நகர மன்ற துணை தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனால் தி.மு.க. தலைமை சார்பில் அறிவிக்கப்பட்ட சத்தியசீலன் தோல்வியடைந்ததால், தி.மு.க. நகர்மன்றத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தி.மு.க. நகர செயலர் செல்வம் தலைமையில் கட்சி அலுவலத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தலைவர் வேட்பாளராக போட்டியிட்ட சத்தியசீலன் கூறியதாவது:- தலைமை கழகம் அறிவித்த என்னை தோற்கடிக்க காரணமான ஜேம்ஸ், வெங்கடேசன், கிருஷ்ணவேணி, மகேஸ்வரி, கோவிந்தராஜ்,தர்மராஜன், சியாமளா மற்றும் நகர பொறுப்புகுழு உறுப்பினர்கள் செல்வராஜ், செந்தில்குமார், நகர பொறுப்புக்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் மீது தலைமை கழகம் நடவடிக்கை பரிந்துரை செய்ய நகர செயலரை கேட்டுக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் கூறியதாவது:- தலைமைக்கழகம் அறிவித்த தி.மு.க. வேட்பாளர் சத்தியசீலனை தோற்கடிக்க காரணமானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத்திற்கும், தலைமை கழகத்திற்கும் பரிந்துரை செய்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர் ரங்கநாதன், வெங்கடேசன், ராஜ்குமார், புவனேஸ்வரன், ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.