மின் மாற்றியை மாற்றியமைக்க கோரிக்கை
குமாரபாளையத்தில் மின் மாற்றியை மாற்றியமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின் மாற்றியை மாற்றியமைக்க கோரிக்கை - குமாரபாளையத்தில் மின் மாற்றியை மாற்றியமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பாலமுருகன் கோயில் எதிரில் உள்ள மின்மாற்றி மிகவும் பழுதாகி, அடிக்கடி தீப்பொறி உருவாகி, அப்பகுதியினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பொதுமக்கள் பெருமளவில் வருவதால், எந்நேரமும் விபத்து அபாயம் ஏற்படும் நிலையில் இந்த மின்மாற்றி இருந்து வருகிறது. இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
இந்த மின் மாற்றியை மாற்றியமைக்கவும், இடமாற்றம் செய்யவும் பலமுறை மின்வாரிய அதிகாரிகள் வசம் கூறியும் பலனில்லை. தொடர்ந்து ஏற்படும் தீப்பொறியால் இப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள். இனியும் தாமதம் செய்யாமல் மின்மாற்றியை இடமாற்றம் செய்து, புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.