குமாரபாளையத்தில் புதிய பாலத்தின் உயரத்தை சமன் செய்ய கோரிக்கை
குமாரபாளையம் பெரியார் நகர் பகுதியில் உள்ள பாலத்தின் உயரத்திற்கு மண் கொட்டி சமன் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம் ஆனங்கூர் சாலையில் இருந்து நாராயண நகர் செல்லும் வழியில் பெரியார் நகரில் புதிதாக பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. ஆனால் பாலத்தின் உயரம் அளவிற்கு மண் கொட்டி சமன் செய்ய வேண்டும். மேலும் கட்டுமான கழிவுகளை அகற்றி, புதிய தார் சாலை அமைக்க வேண்டும். இவ்வழியே அதிக அளவிலான மாணவ மாணவியர்கள் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர். தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.