உடைந்த மின் கம்பத்தை மாற்றக் கோரிக்கை
குமாரபாளையத்தில் உடைந்த மின் கம்பத்தை மாற்றக் கோரிக்கை எழுந்துள்ளது.
குமாரபாளையத்தில் உடைந்த மின் கம்பத்தை மாற்றக் கோரிக்கை எழுந்துள்ளது.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில் எதிரில் மின்மாற்றி உள்ளது. இதன் ஒரு கம்பம் மிகவும் பழுதான நிலையில், உச்சியில் உடைந்தும், கீழ் பகுதியில் விரிசல் விட்டும் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தத்தின் பேரில், அருகில் உள்ள பழைய சார்பதிவாளர் அலுவலகம் அருகே மாற்றியமைக்க அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்டது. காலம் கடந்து கொண்டே செல்வதால், கம்பமும் பழுதாகி வருகிறது. விபத்து அபாயம் ஏற்படும் முன், இந்த கம்பத்தை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்கள் அகற்றகோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மின்வாரியத்திற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
மின்வாரிய உதவி இயக்குனருக்கு அனுப்பிய புகார் மனுவில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா தெரிவித்திருப்பதாவது :
குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் முதல் சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு வரை சாலைகளில் இருபுறமும் உள்ள தேவையற்ற மின்புதைவட ஒயர்கள், மின்பெட்டிகள் உள்ளது. இதனால் சாலைகளில் நடந்து செல்பவர்களுக்கு இடையூராக, மின்பெட்டிகளின் கதவுகள் எல்லாம் திறந்து கிடக்கிறது. சிறு குழந்தைகள் தவறுதலாக கைகளை வைத்தாலும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற புதைவட ஒயர்கள் வைத்துள்ளனர். கேபிள்கள் சிறு சந்துகளில் வைத்து இருப்பதால் அப்பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கும், குழந்தைகளுக்கும் ,சாலையில் நடந்து செல்பவர்களுக்கும் மிகவும் இடையூராக உள்ளது. விஷ ஜந்துக்களும் தங்கும் இடமாக மாறியுள்ளது.
ஆகையால் தாங்கள் பொதுமக்களின் நலன் கருதி அந்த இடத்தினை ஆய்வு செய்து தேவையற்ற ஒயர்கள், மின்பெட்டிகளை அகற்றுமாறு மக்கள் நீதி மய்யம் மற்றும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.