இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.;

Update: 2024-08-20 16:30 GMT

குமாரபாளையம் தாலூகா அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் துரைசாமி தலைமையில், தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. நூற்றுக்கு மேற்பட்டோர் கடந்த ஒரு வருட காலமாக வீட்டுமனை பட்டாக்கோரி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததால், கல்லங்காட்டுவலசு மற்றும் பல்லக்காபாளையம் பகுதியை சேர்ந்த 148 குடும்பத்தினர் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தினர். குடிநீர், சாக்கடை, மருத்துவமனை உள்ளிட்ட வசதி ஏற்படுத்தி தரக்கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் பழனிசாமி கூறியதாவது:

தட்டாக்குட்டை பல்லக்காபாளையம் பகுதியில் சேர்ந்த விளிம்பு நிலையில் உள்ள 148 குடும்பத்தினருக்கு கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்ற போராட்டத்தின் வாயிலாக கடந்த பிப்ரவரி மாதம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வீட்டுமனை நிலங்கள் வழங்க அரசு புறம்போக்கு நிலங்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் தாலுக்கா அலுவலகம் சார்பில் எடுக்கப்படவில்லை.வறுமையின் காரணமாக ஒரு வீட்டில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வசிக்கும் சூழ்நிலையில், போதிய வருவாய் இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பட்டா வழங்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போராட்டம் நேற்று இரவு 08:30 வரையில் நீடித்தது.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் துரைசாமி கூறியதாவது:

திருச்செங்கோடு ஆர்.டி.ஒ..சுகந்தி, டி.எஸ்.பி. இமயவரம்பன் நேரில் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறிய பின், தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது. 

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News