மினி டெம்போ நிறுத்த மாற்று இடம் வேண்டும் என கோரிக்கை
குமாரபாளையத்தில் மினி டெம்போ நிறுத்த மாற்று இடம் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.;
குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலையில் காலனி ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாலத்தின் மீது மினி டெம்போக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலையில், காலனி ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாலத்தின் மீது மினி டெம்போக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது. இந்த பாலம் மிக குறுகியதாக உள்ளது. இதனால் பஸ், லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்கள் செல்ல போதுமான இடவசதி இல்லையென்பதால் பாலம் அகலப்படுத்தப்பட்டது. இந்த பாலம் அருகே மினி டெம்போ ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த பகுதியில் அம்மா ஸ்டோர் கட்டப்பட்டதால் இங்கு இருந்த டெம்போக்கள் அனைத்தும் பாலத்தின் மீது வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாலத்தின் அகலம் மீண்டும் குறுகியதாக மாறியது.ஆகவே அனைத்து ரக வாகனங்களும் எளிதில் செல்லவும், விபத்து அபாயம் ஏற்படாதிருக்கவும் பாலத்தின் மீது நிறுத்தப்பட்ட மினி டெம்போக்களை நிறுத்த மாற்று இடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.