தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் குடியரசு தினவிழா

குமாரபாளையம் அருகே தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் குடியரசு தினவிழா நடைபெற்றது.;

Update: 2022-01-26 17:45 GMT

தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த குடியரசு தின விழா

குமாரபாளையம் அருகே சத்யா நகர் அன்னை ஆதரவற்றோர் மையத்தில் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பட்டய தலைவர் ஜெகதீஸ் தலைமை வகிக்க, சங்க தலைவர் சண்முகசுந்தரம் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.

மையத்தில் உள்ள முதியோர்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் மதியழகன், விடியல் பிரகாஷ், சேவற்கொடியோர் பேரவை நிர்வாகி பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் செல்லவேல், சங்க நிர்வாகி மாதேஸ்வரன், உள்பட பலரும் பங்கேற்று சிறப்பித்தனர். பட்டய தலைவர் ஜெகதீஸ் மையத்தின் நிர்வாகி ஹேமமாலினி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

Tags:    

Similar News