குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இடையூறாக இருந்த மரக்கிளைகள் அகற்றம்
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.;
குமாரபாளையம் பேருந்து நிலைய வளாகத்தில் பஸ்கள் நிற்குமிடம், டெம்போ ஸ்டாண்ட், டூரிஸ்ட் வேன்கள் ஸ்டாண்ட், டூரிஸ்ட் கார்கள் ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட் ஆகியன செயல்பட்டு வருகிறது.
கடந்த 2 மாதங்களாக தினமும் பருவமழை பெய்து வருவதால், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டன. இதனால் பஸ்கள், டெம்போக்கள், டூரிஸ்ட் வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த இடையூறாக இருந்து வந்தது. அதுவுமின்றி அங்குள்ள மின் கம்பியிலும் மரக்கிளைகள் உரசியதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் மரக்கிளைகளை இன்று நகராட்சி பணியாளர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.