பள்ளிபாளையத்தில் நிவாரணப்பொருள், ரூ.2000 நிதிஉதவி வழங்கல்
பள்ளிபாளையம் ஆவரங்காட்டில் 14-வகையான மளிகைப் பொருள் தொகுப்பு, 2000 ரூபாய் நிவாரணத்தொகை பொதுமக்களுக்கு வழங்பட்டது.;
பள்ளிபாளையத்தில், ரேஷன் குடும்ப அட்டை பயனாளிக்கு மளிகைப்பொருள் தொகுப்பு மற்றும் 2000 ரூபாய் நிதியினை திமுக நகர செயலாளர் அ.ரவிச்சந்திரன் வழங்கினார்.
கொரோனா கால நிவாரண நிதி இரண்டாம் கட்ட நிவாரணத் தொகை ரூபாய்2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும், இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில் அமைந்துள்ள நியாயவிலைக்கடையில், பள்ளிபாளையம் திமுக சார்பில், குடும்ப அட்டை பயனாளிகளுக்கு 14 வகையான மளிகைப்பொருள் தொகுப்பு மற்றும் 2000 ரூபாய் நிவாரண தொகையை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளிபாளையம் நகர செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், பயனாளிகளுக்கு மளிகைத்தொகுப்பு மற்றும் நிவாரணத்தொகையை வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஏராளமான திமுக பிரதிநிதிகளும், பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.