குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம்

குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேர்மன் விஜய் கண்ணன் அன்னதானம் வழங்கினார்.;

Update: 2022-07-18 11:00 GMT

குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் பாதுகாப்பு மையங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு சேர்மன் விஜய்கண்ணன் அன்னதானம் வழங்கினார்.

குமாரபாளையத்தில் காவிரி கரையோரப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் வெள்ளத்தில் நடந்து சென்று நேரில் பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் பாதுகாப்பு மையங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நகராட்சி பணியாளர்களிடம் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர சொல்லி அறிவுறுத்தினார். கவுன்சிலர்கள் ஜேம்ஸ், வேல்முருகன், அழகேசன், கனகலட்சுமி நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதே போல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அன்னதானம் வழங்கினார். இதில் நகர செயலர் பாலசுப்ரமணி, நிர்வாகிகள் புருஷோத்தமன், சிங்காரவேல், திருநாவுக்கரசு உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News