குமாரபாளையத்தில் தீ விபத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி
குமாரபாளையத்தில், தீ விபத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.;
கடந்த 20 நாட்களுக்கு முன், குமாரபாளையம் கலைமகள் வீதி எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி கூடம் அருகே உள்ள ஒரு வீட்டில் மின் கசிவு காரணமாக ஓட்டு வீடு தீப்பற்றி எரிந்தது. இதில் வசித்த பவித்ரா, 11, ஜெகதீஷ்குமார், 10,ஆகியோரது தந்தை பலத்த காயமடைந்து ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்காலிகமாக சிறார்கள் அவரது பெரியப்பா, பெரியம்மாவான சாதனா, 48, வடிவேல் வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்கள், தன்னார்வலர்கள் மூலம் உதவி கேட்டிருந்தனர். இதையறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிர்வாகி சவுண்டேஸ்வரி, பராமரிக்கும் கரங்கள் பொதுநல அமைப்பு நிர்வாகி பீட்டர் செல்வராஜ் சார்பில் நிதியுதவி, அரிசி, மளிகை சாமான்கள்,மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன. இதில் கவுன்சிலர் கனகலட்சுமி, விடியல் பிரகாஷ், சீனிவாசன், ஆசிரியை ஹெலின் பிரிசில்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.