குமாரபாளையம் அருகே ரேக்ளா பந்தயத்தில் சீறி பாய்ந்த குதிரைகள்
குமாரபாளையம் அருகே ஆப்பக்கூடல் சாலையில் ரேக்ளா பந்தயத்தில் குதிரைகள் சீறி பாய்ந்தன.;
குமாரபாளையம் அருகே ஆப்பக்கூடல் சாலையில் ரேக்ளா பந்தயத்தில் குதிரைகள் சீறி பாய்ந்தன.
ஆடிப்பெருக்கையொட்டி பவானி, குமாரபாளையம் நண்பர்கள் சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. பவானி நகர தி.மு.க. நகர செயலர் நாகராஜன், முன்னாள் நகர தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர் செல்வராஜன், டி.எஸ்.பி. தீபக் சிவா, ரேக்ளா அசோசியேசன் தலைவர் வெங்கடேசன், குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் விஜயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தபட்டது. 45 இன்ச் அளவுள்ள குதிரை பிரிவில் முதல் பரிசு பெற்ற நபருக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசினை குமாரபாளையம் சேர்மன் விஜய்கண்ணன் வழங்கினார்.
இதில் கவுன்சிலர்கள் ஜேம்ஸ், கோவிந்தராஜ், நிர்வாகிகள் கதிரேசன், ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.