குமாரபாளையத்தில் மண்டல அளவிலான கராத்தே போட்டி

குமாரபாளையத்தில் மண்டல அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.;

Update: 2022-04-04 15:45 GMT

குமாரபாளையத்தில் மண்டல அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. 

குமாரபாளையம் கியோகுசின் கராத்தே பயிற்சி மையம் சார்பில் மண்டல அளவிலான கராத்தே போட்டி அமைப்பாளர் அர்ஜுனன் தலைமையில் பி.எஸ்.ஜி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், தர்மபுரி, தஞ்சை ஆகிய மாவட்டங்கள் மற்றும் கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த 802 பேர் பங்கேற்றனர். 10,12,15,16,18,20,25,30 ஆகிய வயது பிரிவுகளின் படி போட்டிகள் நடத்தப்பட்டன. கட்டா, அடிப்படை, சண்டை பயிற்சி ஆகிய வகைகளில் போட்டிகள் நடத்தப்பட்டதில் குமாரபாளையம் எஸ்.ஆர்.கே. பள்ளி அணியினர் 29 பரிசுகள் பெற்று முதல் பரிசு மற்றும் சாம்பியன்ஷிப் பட்டத்தையும், குமாரபாளையம் சுந்தரம் நகர் நகராட்சி பள்ளி அணியினர் 17 பரிசுகள் பெற்று 2ம் இடத்தையும், கோவை செங்கப்பள்ளி அணியினர் 9 பரிசுகள் பெற்று 3ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஓம்ராம் குருஜி பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். நடுவர்களாக அர்ஜுன், நவீன், மவுலி, குமார், ரமேஸ் உள்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று போட்டிகளை கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர்.

Tags:    

Similar News