குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் திடீர் ஆய்வு
குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மே 5ல் துவங்கிய தேர்வுகள், மே 13ல் நிறைவு பெற உள்ளது.
காலை நேரங்களில் 1,3,5 வகுப்புகளுக்கும், மாலை நேரங்களில் 5,7,8 வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று மாலை வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டு தேர்வுப் பணிகளை ஆய்வு செய்தார். தலைமை ஆசிரியை சுகந்தி உள்ளிட்ட ஆசிரியைகள் பலர் உடனிருந்தனர்.