பள்ளிபாளையம் அருகே ஆக்கிரமிப்பு அரசு நிலம் வருவாய்த்துறையினர் மீட்பு

பள்ளிபாளையம் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.;

Update: 2022-04-04 20:00 GMT

பள்ளிபாளையம் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.

பள்ளிபாளையம் அருகே சின்னார்பாளையம் பகுதியில் 27 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த ஈஸ்வரன், ஆறுமுகம் ஆகிய இருவரும் பல வருடங்களாக விவசாயம் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களிடம் பலமுறை அரசு தரப்பில் எச்சரிக்கை செய்தும் நிலத்தை ஒப்படைக்கவில்லை என தெரிகிறது. மாசுக்கட்டுப்பாடு அலுவலகம் கட்ட இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக இந்த நிலம் மீட்பதற்காக குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் நேரில் சென்று, அந்த நிலத்தை மீட்டனர்.

இதற்கு அப்பகுதியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News