சாலையோரம் நடப்பவர்களே கவனமாக செல்லுங்கள்.. பள்ளிபாளையத்தில் நடந்த விபரீதம்
நடந்து செல்லும் போது வடிகால் மீது போடப்பட்ட கான்கிரீட் தளம் உடைந்து கம்பிகளுக்கு நடுவில் கால் சிக்கிய பரிதாபம்.;
கான்கிரீட் மூடு தளத்தில் சிக்கிய பெண்ணின் காலை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர்.
பள்ளிபாளையம் ஒட்ட மெத்தை பகுதியில் ஓட்டல் கடை நடத்தி வருபவர் கார்த்தி, 34. இவரது மனைவி சுகன்யா, 28. வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல ஒட்டமெத்தை ஏ.வி.எஸ். கோழிக்கடை அருகே வந்த போது, அங்கு வடிகால் மீது மூடப்பட்ட கான்கிரீட் மூடு தளத்தின் மீது கால் வைத்தார். அப்போது அவரது இடது கால் கான்கிரீட் கம்பிகள் நடுவில் சிக்கியது. காலை எடுக்க முடியாமல் திணறினார். வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வெப்படை தீயணைப்பு படையினருக்கு தகவல் தர, நேரில் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டர் கொண்டு கம்பிகளை துண்டித்து, சுகன்யாவை பத்திரமாக மீட்டனர். தீயணைப்பு படையினரை இந்த பணியினை பொது மக்கள் பாராட்டினர்.